Monday, October 22, 2012

கவிதைகள் - 1

நீ சூடிய பூவெல்லாம் என்ன பெயர் வைத்து கொள்ளும்?

கடவுளின் பேனா முள்ளின் ஓவியம் நீ எவ்வித கிறுக்கலும் இல்லாமல்!!


இப்போழுதே உன் காதலை கொடுத்து விடாதே
இன்னும் எழுத வேண்டிய கவிதைகள் நிறையவே இருக்கிறது!!

வித விதமாக நீ அணியும் ஆடைகளை விட வித விதமான உன் முக பாவமே அதிகம் வசீகரிக்கிறது!!


அடிக்கடி பார்க்காதே
அத்தனை வேகம் இல்லை என்னிடம்
கவிதை எழுதுவதற்கு!!

நீ தந்த காதலில் கவிதை எழுதுகிறேன் கவிதையை உனக்கு சமர்பித்து விடுறேன் காதலை எனக்கு சமர்பித்து விடு!!

வித விதமான வண்ணங்களில் நீயும்!!
வித விதமான எண்ணங்களில் நானும்!!

தவழுந்து செல்கிறதா இல்லை தங்கி விட பார்க்கிறதா - உன் கூந்தலில் பூக்கள்!!

ஒரு புள்ளிமான் புள்ளி வைத்து கோலம் போடுகிறதே#அடடே ஆச்சிரிய குறி!!

நீ பேருந்தில் ஏறினால் மொக்கை பேருந்துக்கும் ரெக்கை முளைத்து விடுகிறது!!!

மென்பொருளில் ஓர் அழகிய பெண்பொருள்!!

நீ வெட்டி விட நினைக்கும் பொழுதெல்லாம் வளர்ந்து கொண்டு இருக்கிறது எனது காதல் வெட்டி விடும் மரத்தை போல

நீ இருக்கையில் நிலவெதற்கு கடத்த சொல்கிறேன் கடவுளிடம்!!

அவள் வேண்டும் என அடம் பிடிக்கும் காதலை என்ன சொல்லி சமாளிப்பது!!

திருடிய இதயங்களை என்ன செய்வார்கள் பெண்கள்?

விழியா வீணையா இப்படி மீட்டுகிறாய்!!

இதயங்கள் இடம் மாறும் போது தடயங்கள் வைத்துக்கொள்ளுங்கள்!!

உன் கன்னகுழிகளில் நம் குழந்தைகள் எப்பொழுது பதுங்கி விளையாடுவது!!

விழி மொழியில் என் காதலை கொஞ்சம் வழி மொழியேன்!!

விடுபட்ட காதல்களில் நம் காதல்!!

ஒவ்வொரு நாளும் உடைந்து சிதறும் இதயத்தை எடுத்து ஒட்டவே நேரம் போதவில்லை!!

அண்மையில் அருகாமையில் ஒரு பெண்மயில்!!

பொங்கி வழியும் ரத்தத்தை உடல் பார்த்து கொள்கிறது பொங்கி வழியும் காதலை நீ பார்த்து கொள்ளேன்!!

உனை பார்க்கும் பொழுதெல்லாம் கன்னத்தில் போட்டு கொள்ளவா இல்லை கட்டி பிடித்து முத்தமிடவா?#குழந்தையா தெய்வமா?குழம்பி போகிறேன்!!

உடைத்து விட்டு சென்ற இதயத்தை ஒட்ட வைத்து கொண்டிருக்கிறேன்!!

முத்தமிடுகிறாயா இல்லை மூச்சை நிறுத்துகிறாயா!!

தேவதை (தேவை இல்லாமல்)வதை செய்கிறாள்!!

சேலையை நீ கட்டி கொண்டு இருக்கிறாயா? இல்லை சேலை உன்னை கட்டிக்கொண்டு இருக்கிறதா?

பெண்களிடம் ஈர்ப்பதில் தொடங்கி தோற்ப்பதில் முடிவடைகிறது!!

பிறந்து சில தினங்களில் இறந்து விட்டது காதல் கைகுழந்தை!!

ஒரே ஒரு பார்வையை வீசி ஒட்டுமொத்த உயிரையும் எடுத்து கொண்டு அது என்னிடம் இல்லை என்று சொல்ல எப்படி முடிகிறது உன்னால்!!

எந்த பெண்ணிலும் உன் சாயல் தெரிகிறதா என்றே தேடுறேன்!!

பார்க்க வைத்து பழக வைத்து உருக வைத்து கிறங்க வைத்து கடைசியில் உறங்கவும் வைத்து விடுகிறாள் கல்லறையில்.#காதலி

ஒரு பேரழகி தேரழகியாகிறாள்!!!!

கடும் சோகத்தை காட்டினாலும் கடும் கோபத்தையே காட்டுகிறாள் காதலி!!

ஒரு புன்னகை பூவே பூ வைத்து இருக்கிறதே!அடடே ஆச்சிரியகுறி

காதல் மலர்ந்து நிற்கிறது எடுத்து சூடி கொள்ளேன்!!

நீ அழகியா பேரழகியா கண்டுபிடிப்பதற்குள் கடந்து விடுகிறாயே!!

கற்பனை ஆயிரம் விற்பனை ஆயிரம்#காரணம் ஆயிரம்

தீண்டுவதா தீண்டாமல் இருப்பதா உடல் மொழியில் உயிரெடுக்கிறாயே!!

எங்கு இருந்தாலும் தேடி கண்டுபிடித்து விழிகளை பார்க்கும் வித்தையை எங்கு தான் கற்று கொண்டாயோ!!

Tuesday, July 24, 2012

கீச்சுகள் - 5

என் முன்னே எப்போதும் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. நான் எப்போதும் சைடிஷ்யே தேர்ந்தெடுக்கிறேன்

உடம்பு சரி இல்லாம போகும் போது தான் அபரிமிதமான அன்பு கிடைக்கிறது

தடம் மாறும் போது இதயம் இடம் மாறுகிறது#ரயில் காதல்

சாலையில் ஒரு சேலை சோலை

பஸ்ல டிவிஎஸ் ரெண்டுன்னு கேட்டவங்கள ஸ்கூட்டியா பைக்ஆ கேட்டா மொரைக்குறாங்க

ஓணம் பண்டிக அன்னிக்கு வேலைய பாக்குறத சேலைய பாக்குறதன்னு தெரியாம போச்சி

அரசாங்கத்துக்கு உதவனும்னு எனக்கும் ஆச தான். ஆனா இந்த சரக்கு வாசனைய கண்டாலே புடிக்க மாட்டேன்குது.

தலைய சுத்தி மூக்க தொடுறது technology. directஆ மூக்க தொடுறது ஆன்மீகம்

மன்னிப்பு நன்றி எல்லாம் கடவுளுக்கு தெரியாது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் "செயல். எதிர்செயல்"

வாழ்வாதாரங்களை அழித்து விட்டு வரும் வளர்ச்சி ஒரு வளர்ச்சியே அல்ல

நான் திறமையானவன் என்று சொல்லி கொள்வதில் எனக்கு வெட்கமாகவும் குழப்பமாகவும் இன்ன பிற வியாதிகளாகவும் இருக்கின்றன

புத்திசாலிஆண்+புத்திசாலிபெண்=காதல் முட்டாள்ஆண்+புத்திசாலிபெண்=கல்யாணம் புத்திசாலிஆண்+முட்டாள்பெண்=கடலை முட்டாள்ஆண்+முட்டாள்பெண்=கள்ளகாதல்

பிரச்சனை மட்டுமே மனிதர்களை நிறம் காட்டுகிறது

எந்த ஒரு தொடக்கமும் முடிவதென்னவோ
அன்பில் மட்டுமே

பிரபஞ்சத்தின் மொத்த அழகையும் இரு விழிகளில் அடக்கி விட இறைவனால் மட்டுமே முடியும்

என்ன தான் நமக்கு காதலி இருந்தாலும் ஒரு அழகான பொண்ணுகிட்ட ஒருத்தன் கடல போட்ட ஏனோ எரியுது - அனுபவம்

என்னுள் இருக்கும் மிருகத்தை யாரும் எழுப்பாதீர்கள் பின்னர் அதற்கும் சேர்த்து ஒரு பெண் மிருகத்தை தேட வேண்டும்

பணத்த சேர்த்தா நோய குணப்படுத்தலாம் புண்ணியத்த சேர்த்தா நோயே இல்லாம இருக்கலாம்

பிரபஞ்சம் முழுவதும் அலைந்து திரிந்து தேடியவர்கள் தான் கடைசியில் கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள்#பகுத்தறிவாளர்கள்

எல்லா பொண்ணுங்களையும் correct பண்ண நினைக்கிறது ஆண்மனம் எல்லா பசங்களையும் தன் பின்னாடி சுத்த வைக்க நினைக்கிறது பெண்மனம் 

Saturday, July 21, 2012

கீச்சுகள் - 4

மனசாட்சி குப்பையிலும் குப்பை எல்லாம் மனசிலும் இடம் மாறி இருக்கிறது 

சுய ஒழுக்கத்துடனும் நேர்மையான எண்ணகளுடனும் இருப்பவர்களே தற்காலத்தில் சைக்கோ எனப்படுகிறார்கள்

ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ஆனா நாய் வளக்கல ஏன்னா அந்த நாயா தான் த்ரிஷா வளக்குறாங்களே 

பாராட்டுவதற்கு யோசிக்கும் நம்மில் பலர் விமர்சனம் செய்வதற்கு அவ்வளவாக யோசிப்பதில்லை 

வெலவாசிய பார்த்தா பேசமா காட்டுவாசிவே இருந்துடலாம் போல

வாழ்க்கையில் மட்டுமல்ல பேருந்தில் கூட ஒரு இடம் பிடித்து செட்டில் ஆக முடியவில்லை#இளைஞனின் வாழ்க்கை

என்னை யாரும் பாராட்ட முன் வராததால் தனக்கு தானே பாராட்டும் திட்டத்தை அறிமுக படுத்திகிறேன் 

இட்லி மேல சட்னி ஊத்தினாலும் சட்னி மேல இட்லிய போட்டாலும் நனைய போறது என்னவோ இட்லி தான்#தத்ஸ்

பேருந்துதில் கூட்டநெரிசலில் வாழ்க்கையை புரட்டிபோடும் sms அனுப்புகிறார்கள் பெண்கள்#என்ன பண்ற செல்லம்ன்னு

எப்ப கல்யாண சாப்பாடு போட போறன்னு கேக்குறவங்க பொண்ணு இருக்கு கட்டிக்கிறியான்னு கேட்க மாட்றாங்க 

துணி துவைக்க கஷ்டமா இருக்குனு தான் பொண்ணுங்க dressஅ கொரசிக்கிறாங்க அதுல என்ன தப்பு? அல்லாட்டி நீங்க தொவச்சி கொடுங்க பாப்போம்

விட்டத பிடிக்கிறேன் பிடிச்சத விடறேன்#மூச்சு 

பெரும்பாலும் புத்திசாலிதனமான முட்டாள்களே அதிகம் தென்படுகிறார்கள் 

கல்யாணம்ங்கிறது கருவாடு மாறி நல்ல இருக்குனு சொல்ல முடியாது நல்ல இல்லனும் சொல்ல முடியாது 

பேசாம இருக்கிறது தான் தகுதின்னா எனக்கு கூட பிரதமர் பதவி தரலாம்

நாம என்ன தான் விழுந்து விழுந்து படிச்சாலும் எக்ஸாம்ல உட்கார்ந்து தான் எழுதணும்#தத்துபித்துவம் 

garbage collectionல காட்ற அக்கறைய கொஞ்சம் எப்படி குப்பய கொட்றதுன்னு அக்கற காட்டினா நல்ல இருக்கும்

டிராபிக்கில் தன் பங்கும் உள்ளது என்பதை மறந்தே சொல்கிறார்கள்#ச்சே என்ன டிராபிக் 

ஆண்களுக்கு உதவினா உபதேசம் செய்றாங்க பெண்களுக்கு உதவினா சொத்தையே எழுதி வைக்கிறானுங்க 

android application developmentக்கு என்னென்ன tool வேணும்ன்னு சொல்லிட்டு கடைசியா கொஞ்சம் மூளையும் வேணும்னு சொல்றானுங்க 

தாகம் தணிந்தது#அட தண்ணி குடிச்சேன்னு சொல்ல வந்தேன் 

வயலில் களை எடுக்குரவங்கள போய் என்ன பெருசா புடுங்கிட்டன்னு கேக்க முடியாது

நல்ல காதல் டு கள்ள காதல். வழி திருமணம் 

ரூம் கொடுத்து நெட் கொடுத்து அப்பப்ப சரக்கு வாங்கி கொடுத்து எங்கள பத்திரமா பாத்துக்கும் நண்பனின் கருணையே கருணை

கீச்சுகள் - 3


உடனடி தேவையாக இருக்கிறது நிதானம்

தலையும் புரியல வாலும் புரியல#என்ன கொரங்கு டா இது

ஆண்களும் பெண்களும் மட்டுமல்லாமல் அவர்களது காமமும் சேர்ந்தே பயணிக்கிறது#பேருந்து 


மழையில் குடையும் வெயிலில் நடையும் வேகமெடுக்குது 

அன்புள்ள காதலியே என தொடங்கும் காதல் கடிதம் தான் திருமணத்துக்கு பின் வெறுப்பேத்துற பொரம்போக்கேன்னு முடியுது

அட examல தான் answer தெரியாம முழி முழின்னு முழிச்சா இப்பவும் officeல வேல கொடுத்து நைட் எல்லாம் முழி முழின்னு முழிக்க வைக்குறாங்க

சுட்டு போட்டாலும் நமக்கு தோச சுட வரமாட்டேன்குது 

பொண்ணுங்கள எல்லாம் அழக base பண்ணி வரிசயா நிக்க சொன்ன அதான் மூன்றாம்உலகபோர்#அவ ஒன்னும் என்ன விட அழகு இல்ல நான் ஒன்னும் அவள விட கம்மி இல்ல 

ஒரே மாறியானா ringtone வச்சி இருக்குறவனுங்க கொரட்ட விடுறவனுங்க தான் #இன்னா கொரட்ட

சாலை இல்லா திண்டாட்டம் traffic 

officeல வேல இருந்தா figureஅ பாக்க கூடாது figure இருந்தா வேலையே பாக்க கூடாது

கடவுள் உடனே ஸ்பாட்க்கு வரணும்#குற்றம் நடந்தது எதுக்கு நான் பொறந்தது எதுக்கு 

பொண்ணுங்க மனசுல எவ்ளோ ஆழம் போனாலும் அதுக்கு கீழயும் ஆழம் இருக்குனு bulb கொடுக்குறாங்க

என் friend பாட்டு பாடினா அவனோட ஒருவயசு பொண்ணு தூங்கற மாறி நடிக்குது#அப்பா 8னா பொண்ணு 16 

அது இது எது? - vijay tv#அதான் நாங்களும் கேக்குறோம் 

template போட்டு காட்டுடான்னா omelet போட்டு காட்டுறான்#லூசு பய

கீச்சுகள் - 2


ரூம்க்கு வரவனுங்க எல்லாம் வெசம் வச்ச ரூம்ன்னு பல்பு கொடுக்குறாங்க 

பொண்ணுங்க பசங்கள loosuன்னு சொல்றதையும் பசங்க பொண்ணுங்கள figureன்னு சொல்றதையும் விடனும்#நாங்க loosuம் இல்ல நீங்க figureம் இல்ல 

kitchenஅ தூக்கி நடு hallல வச்சா அதுக்கு பேரு தான் fashion 

ஒன்னாம் தேதி வந்தா கூடவே அடுத்த ஒன்னாம் தேதியும் வரணும் சம்பளம்

" 'அது' எங்களுக்கு தெரியாதா" ன்னு கேக்குறவங்களுக்கு " 'இது' எங்களுக்கு தெரியாதா" ன்னு சொல்லிக்கிறோம்

tea சாப்டேன்னு சொன்னதுக்கெல்லாம் treat கேக்குறாங்க#காட்டுபசங்க

நேர்ல பேசும் போது கால் மேல கால் போட்டு பேசுற பொண்ணுங்க தூரத்துல இருக்கும் போதும் call மேல call போட்டு பேசணும் 

காதலிய கல்யாணத்துக்கு பின்னாடி காதலிக்க முடியாது கல்யாணம் பண்ற பொண்ண கல்யாணத்துக்கு முன்ன பாக்க முடியாது#தத்துவம்

நான் யார் தெரியுமான்னு முன்னாடி நிக்கறவங்கள பார்த்து கேக்குறவங்க அப்படியே கொஞ்சம் திரும்பி பின்னாடி நிக்குற மரணத்துகிட்ட நான் யார் தெரியுமான்னு கேளுங்க பாப்போம்

கனவுல யாரோ ஒரு பொண்ணு தொரத்தி தொரத்தி லவ் லட்டர் கொடுக்குது. ஆனா கண்ணு தான் தெரியல.
 
figure ஆ correct பண்ணனும்னா முதல்ல அவகிட்ட இருக்கிற brain ஆ correct பண்ணனும்.

அரகுறையா dress தச்சி தரவங்களுக்கு முழுசா காசு கொடுக்குதுங்க. முழுசா கொண்டு போய் சேக்குற ஆட்டோகாரங்களுக்கு அரகுறையா காசு கொடுக்குதுங்க. 

என்ன தான் கவித எழுதினாலும் அத கலாயிக்கிரதுக்கு காதலி வேணும் 

முற்பகல் bulb கொடுப்பின் பிற்பகல் bulb வாங்க படும்

உன்னை பற்றி கவிதை சொல்கிறேன் என்றால் என்ன என் பேர்ன்னு தான சொல்ல போறன்னு கலாயிக்கிறாள் காதலி

உலகம் முழுக்க spy வச்சி இருக்கிற ஒரே ஆள் கடவுள் தான் 

கற்காலத்தில் ஆடை இல்லாமல், பிறகு முழு ஆடையுடன், அப்புறம் அரைகுறை ஆடையுடன், இறுதியில் ஆடை இல்லாமல்#வாழ்க்கை ஒரு வட்டம்டா 

பால் கலர்ல ஒரு பொண்ணும் டீ கலர்ல ஒரு பையனும் காபி கலர் பைக்ல போறாங்க 

அரசாங்கத்துக்கு உதவனும்னு எனக்கும் ஆச தான். ஆனா இந்த சரக்கு வாசனைய கண்டாலே புடிக்க மாட்டேன்குது. 

ஆவியா வந்து ரூம் சாவிய கேக்குறான் ஒரு பாவி

கை காலுக்கு உற போடுற பொண்ணுங்க கொஞ்சம் வாய்க்கும் போட்ட நல்லா இருக்கும்

திக்கா டிரஸ் போட்ட காலம் போய் கிக்கா டிரஸ் போடுற காலம் வந்துடுச்சி

சுடில பாக்கெட் இல்லாததால தான் பொண்ணுங்க கர்சீப கழுத்துல போட்டுக்குறாங்க

கடைசில போன் கண்டுபிடிச்ச கிரகாம் பெல்லால கடல போட முடியலயே - வருத்தம் 

Thursday, July 19, 2012

கீச்சுகள் - 1

ஒரு பொண்ணு வந்து என் வாழ்க்கையே பொரட்டி போட்டுடுச்சி. இனிமே நான் குப்புறத்தான் படுக்கணும்!!

கண்ண மூடி தியானம் பண்றேன்னு உட்கார்ந்த இப்ப வரைக்கும் இருட்டா தான் இருக்கு. நான் எல்லாம் எப்ப கடவுள பாக்குறது!!

எப்போதும் ஒரு பெண் துணை தேவைப்படுகிறது அன்னையாக காதலியாக நண்பியாக குழந்தையாக. ஆனால் எல்லா உறவுகளிலும் காமம் வழிவதில்லை!!

உன்ன நினைக்கும் போது எல்லாம் என்ன சுத்தி பட்டாம்பூச்சிக்கு பதிலா கரப்பான்பூச்சி தான் பறக்குது!!

என்ன டிரஸ் கொடுத்தாலும் போடறவங்க பொண்ணுங்க. என்ன சரக்கு கொடுத்தாலும் அடிக்கிறவங்க பசங்க!!

நல்லவேளை என் வாழ்க்கைக்கு சக்கரம் இருக்கிறது. இல்லையென்றால் அதை நகர்த்துவதே பெரும் கடினமாய் போய் இருக்கும்!!

கடையில் இன்று ஒரு பாத்திரம் வாங்கி வந்தேன். அது நம்பிக்கை பாத்திரமாக இருக்குமா என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்!!

விவேகானந்தர் கேட்ட நூறு அல்ல. ஆயிரம் இளைஞர்கள் இன்று இருக்கிறார்கள். ஆனால் ஒரு விவேகானந்தர் கூட இல்லை என்பது வருத்தமே.

பேன்ட் ஷர்ட் போட்டா மீச முளைச்சிடும்ன்னு பொண்ணுங்க நினைக்க கூடாது!!

பெண்கள் குறைவாய் சாப்பிடுகிறார்கள் அதிகமாய் பேசுகிறார்கள்#A Medical Miracle!!

மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பு தன்னை ஒரு முறை விமர்சித்து கொள்வது நல்லது!!

வெறும் இட்லி சாப்பிடுவது எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது bachelor வாழ்க்கை# ஒரு கார சட்னி ஒரு தேங்கா சட்னி ஒரு வெங்காய சட்னி இல்லாமல்!!

கடவுளின் முட்டாள்தனம் மனிதன்!!
மனிதனின் புத்திசாலித்தனம் கடவுள்!!


 

Friday, May 18, 2012

எல்லையற்றவன்

          இங்கு இது வெறும் எழுத்து தான் அதை உணராத போது. அதை உணரும் போது நிச்சயம் அது அத்தனை பிரமாண்டம். அதை உணரும் தருணத்திற்காக ஒவ்வொருவரும் காத்திருப்போம். பிடித்தவர்களை பார்கையில், பழகியவர்களை பார்க்கையில் ஏற்படும் சந்தோஷம் எத்தனை இனிமையானதோ அத்தனை இனிமை. இல்லை பிரமாண்டத்தின் உச்சம். யாரும் சொல்லாததை நான் இங்கு சொல்ல போவதில்லை. நானும் பார்த்த பிரமாண்டமே அது. கடவுளின் ஒரு துளியை பார்த்த போதே அத்தனை பிரமாண்டம். அதை பார்க்கும் போது நிச்சயம் நாம் கரைந்தே போவோம்.  தன்னிலை என்பதே அங்கு இருக்காது.

    எப்படி ஒரு பெண்ணின் அழகில், மனதை கொள்ளை கொள்ளும் இசையில், இயற்கையின் பேரழகில், எங்கெல்லாம் தன்னிலை மறந்து போகிறதோ அங்கெல்லாம் வெளிபடுவது கடவுளின் சிறு துளியே.

     உலகில் எத்தனை கோடி இன்பங்கள் உள்ளனவோ அவை அத்தனையும் அதை தாண்டியும் அறியமுடியாத அளவில் பேரானந்தம் அடைவோம்.

    
                                                                 "விஸ்வரூபம்"
                                               "அடியும் முடியும் அறிய முடியா"
   

அது ஒரு சக்தி, ஏதோ ஒன்று என்பதை விட்டு விட்டு அதை அறிய முயலுவோம்.

பிரமாண்டத்தின் அனுபவத்தை உணர ஒரு அடி முன்னெடுத்து வைப்போம்.